இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி-பதைபதைக்கச் செய்யும் சி.சி.டி.வி. காட்சி

0 3795

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான பதைபதைக்கச் செய்யும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தவாசிக்கு சென்றுகொண்டிருந்தார். முன்னால் சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்தை முந்த முயன்ற போது அவர் எதிர்மார்க்கத்தில் வந்த இருசக்கர வாகனத்துடன் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து போன்ற வாகனங்களை சாலையில் முந்திச் செல்லும் போது உரிய கவனம் இல்லை என்றால் எந்த மாதிரியான விளைவு ஏற்படும் என்பதற்கு இந்த விபத்து உதாரணமாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments