நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேருக்கு கொரோனா

0 2447
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் மேலும் 6 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்து, நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 333ஆகவும், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 531ஆகவும் அதிகரித்துள்ளது.

 நாட்டின் பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 86 ஆயிரத்து 110 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து மருத்துவ சிகிச்சையில் 67 ஆயிரத்து 692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 948ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 897ஆகவும் அதிகரித்துள்ளது. அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545ஆகவும், பலி எண்ணிக்கை 133ஆகவும் பதிவாகியுள்ளது.

3 மற்றும் 4ம் இடத்திலுள்ள டெல்லி, குஜராத் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 5ம் இடத்திலுள்ள ராஜஸ்தானில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments