2020-21-ம் ஆண்டுக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1189

அ.தி.மு.க. ஆட்சியில் - ஏற்கனவே 2020-21-ம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் மொத்த வரி வருவாயாக மதிப்பிடப்பட்ட 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் சொந்த வருவாய் மூலம் கிடைக்குமா? என்பது “கானல் நீராகவே” ஆகி, காணாமல் போய் இருப்பதுதான் தற்போதைய நிலவரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் - பல தரப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினைக் கவனத்தில் வைத்தும், 2020-21-ம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments