மகாராஷ்டிராவில் கூட்டணிக்கு நெருக்கடி இல்லை-சிவசேனா

0 493

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் பவார் மாநில ஆளுநரை திடீரென சந்தித்து பேசியிருப்பது மிகுந்த அரசியல் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவும் மகாராஷ்டிராவில தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரத் பவார் ஆளுநர் கோஷியாரியை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும் அவரது வீட்டில் சரத் பவார் சந்தித்தார். இந்த சந்திப்புகளால், ஆளும் கூட்டணி எந்த நேரத்திலும் உடையக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் சரத் பவாரும், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தும் இதை மறுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments