வேகமாக பைக்கில் சென்றது குறித்து கேட்டதற்காக தாக்குதல் நடத்திய சிறுவர்கள்

0 1232

வேகமாக பைக்கில் சென்றது குறித்து கேட்டதற்காக, அரிவாள், கம்பியுடன் வந்து மளிகைக் கடைக்காரரை தாக்கிய சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாளையக்காடு சூர்யா நகரில், என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று மாலை பைக்கில் வேகமாக சென்றதாகவும், குழந்தைகள் இருக்கும் பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாக பைக் ஓட்டி செல்கிறீர்கள் என ராஜேஷ் என்ற மளிகைக் கடைக்காரர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த மேலும் சிலரை அழைத்து வந்து, ராஜேஷை தகாத வார்த்தைகளால் பேசி, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. சிறுவர்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து தாக்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த, போலீசார், 5 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். ராஜேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments