வருங்கால கணவனை கரம் பிடிக்க, 80 கி.மீ நடந்த பெண்

0 2058

உத்தரப் பிரதேசத்தில், 20 வயது பெண், 80 கிலோமீட்டர் நடந்து சென்று, வருங்கால கணவனை கரம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கான்பூரை சேர்ந்த கோல்டிக்கும், கன்னோஜை சேர்ந்த வீரேந்திர குமாருக்கும் கடந்த நான்காம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், பெண் வீட்டார் திருமணத்தை ஒத்தி வைத்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கோல்டி, போக்குவரத்து வசதிகள் இல்லாததையும் பொருட்படுத்தாமல், 80 கிலோமீட்டர் நடந்தே சென்று வீரேந்திர குமாரின் வீட்டை அடைந்துள்ளார். இதை தொடர்ந்து, அங்குள்ள புராதான கோவிலில், இரு வீட்டாரின் சம்மதத்துடன், முகக்கவசம் அணிந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments