பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பிரமாண்ட அளவில் உருவாக்கப்பட்ட கல்லறை

0 1123

பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான சாவோ பவுலோவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் வகையில் பிரமாண்டமான கல்லறை  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் 63ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் தற்போது காணப்படும் கொரோனா பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்ற கவலை அங்கு எழுந்துள்ளது.

இதற்கிடையில் இந்த கல்லறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மின்னல் வேகத்தில் உறவினர்களால் அடக்கம் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் கொரோனாவால் உயிரிழந்த மற்றொருவரின் உடல் அடக்கம் செய்ய தயாராக அங்கு இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments