கர்நாடகத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளை 7 நாட்கள் தனிமைப்படுத்த அம்மாநில அரசு முடிவு

0 1089

உள்நாட்டு விமான சேவைகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளையும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தி நோய் அறிகுறி இல்லாதவர்களை 7  நாட்களுக்கு ஓட்டல்களில் தனிமைப்படுத்தப் போவதாகவும் அதன் பின்னர் இரண்டாவது பரிசோதனைக்குப் பின்னர் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த இருப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பாதிப்பு அதிகமில்லாத மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் செல்லும் இடங்களில் தனிமைப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லாத நடைமுறை என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகா முரணான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையை அடுத்து பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது கர்நாடக அரசு. இதற்கான புதிய வழிகாட்டல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலமும் மத்திய அரசுடன் முரண்பட்டு பயணிகளை தனிமைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments