உலகை உலுக்கும் கொரோனா.. 53 லட்சம் பேருக்கு நோய் தொற்று..!

0 1068

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அக்கொடிய நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் சுமார் 5 மாதங்களாக உலுக்கி எடுத்து வருகிறது கொரோனா தொற்று நோய். உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளே அந்நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2ஆவது நாடாக பிரேசிலும், 3ஆவது நாடாக ரஷ்யாவும் உள்ளன. அந்நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்துக்கு அதிகமாக உள்ளது. பலி எண்ணிக்கையும் அந்த 2 நாடுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4 முதல் 6 வரையிலான இடங்களை வகிக்கும் ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலியிலும் 2 லட்சத்தை கொரோனா பாதிப்பு தாண்டியுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஒன்னே முக்கால் (1.75 லட்சம்) லட்சத்தையும், துருக்கியில் ஒன்னரை லட்சத்தையும் (1.50 லட்சம்) கடந்துள்ளது. ஈரான், இந்தியா நாடுகளில் ஒன்னே கால் லட்சம் பேரும், பெரு நாட்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால் உலகம் முழுவதும் அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 லட்சத்தை இன்று தாண்டியது. இதேபோல் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுதவிர்த்து பல்வேறு நாடுகளிலும் 28 லட்சம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments