நீடிக்கும் கொரோனா உச்சம் ஒழிப்பு பணிகள் தீவிரம்

0 1652
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு, 3 ஆயிரத்து 602 ஆக உயர்ந்தபோதிலும் சுமார் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு, 3 ஆயிரத்து 602 ஆக உயர்ந்தபோதிலும் சுமார் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் 4 மாநிலங்கள் அதிக அளவிலும், பிற மாநிலங்கள் கணிச மான அளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 41 ஆயிரத்து 600 ஐ தாண்டி விட்டது. அதேநேரம், அங்கு உயிர்ப்பலி ஆயிரத்து 454 ஐ எட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2- ஆவது இடம் வகிக்கிறது.

குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்க, டெல்லியில் கொரோனா பாதிப்பு, 12 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப், தெலங்கானா, பீஹார், கர்நாடகா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், மொத்தம்16 மாநிலங்கள் இடம் வகிக்கின்றன.

கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்தது.

இதனிடையே, நாடு முழுவதும் 66 ஆயிரத்து 330 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை, சுமார் 49ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments