இந்தியாவில் மழைக்காலம் முடிந்தபிறகு ஐபிஎல் போட்டி நடத்தப்பட வாய்ப்பு- ராகுல் ஜோஹ்ரி

0 1701

இந்தியாவில் மழைகாலத்துக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி (Rahul Johri) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதையடுத்து முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மீண்டும் அப்போட்டி எப்போது நடத்தப்படும் என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி அளித்த பேட்டியில், இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பங்கேற்றவர்களை காட்டிலும், ஐபிஎல் போட்டியை அதிக எண்ணிக்கையிலானோர் கண்டுகளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச வீரர்களை கொண்டு அப்போட்டியை இந்தியாவில் மழைகாலம் முடிந்தபிறகு நடத்தும் திட்டம் இருப்பதாகவும் ராகுல் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments