சிக்கிம் மாநில எல்லையில் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரிப்பு

0 1485

சிக்கிம் எல்லை வழியே தங்கள் பகுதிக்குள் ஊடுருவி தங்களது வீரர்களின் ரோந்து பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து விட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

பீஜிங்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கு எல்லை வழியாகவும், சிக்கிம் வழியாகவும் தங்கள் பகுதிக்குள் வந்துள்ள வீரர்களை இந்தியா உடனடியாக திரும்பப் பெற வேண்டும், முந்தைய நிலையை அங்கு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை. சிக்கிமின் நாகு லா (Sikkim’s Naku La pass) பகுதியில் கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இருந்து இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதேபோல் கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளிலும் தகராறு நிலவுகிறது. இதனால் அங்கு இருநாடுகளும் அங்கு வீரர்களை குவித்துள்ள நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments