கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

0 1096
நாட்டில் 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

நாட்டில் 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய போதும் பின்னர் சரிவின் பாதையில் பயணித்தது. மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் முதலீட்டாளர்களை கவர தவறியதால், வங்கி, நிதி நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் விற்று தள்ளினர்.

இதனால் சந்தை வேகமாக கீழே இறங்கியது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1069 புள்ளிகள் சரிந்து 30 ஆயிரத்து 28ல் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 313 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 8823ல் நிலை கொண்டது.

ஐடி தவிர்த்து அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 33 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 91 காசுகளாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments