ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தால் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம்

0 1182
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதிரிதீயிலான பிரச்னையை சுட்டிக்காட்டி, 6 ஆயிரத்து 200 ஒப்பந்த தொழிலாளர்களை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதிரிதீயிலான பிரச்னையை சுட்டிக்காட்டி, 6 ஆயிரத்து 200 ஒப்பந்த தொழிலாளர்களை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானம் பாதிக்கப்பட்டு,  நிதி ரிதீயிலான பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், அட்டென்டர்கள் உள்ளிட்டோரை பணிநீக்கம் செய்து விட்டதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

வாய்மொழியாக 6 ஆயிரத்து 200 பேருக்கும் இனிமேல் பணிக்கு வர வேண்டாம் என ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த சங்கம் புகார் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments