கர்நாடகாவில் 3 ஆம் கட்டமாக ரூ.512 கோடி நிவாரண நிதி அறிவிப்பு

0 1283
கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மூன்றாம் கட்ட நிவாரண நிதியாக 512 கோடி ரூபாயை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மூன்றாம் கட்ட நிவாரண நிதியாக 512 கோடி ரூபாயை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் மக்காச் சோள விவசாயிகளின் விளைச்சலுக்கு உற்பத்தி விலை கூட கிடைக்கவில்லை என்பதால், அவர்களில் சுமார் 10 லட்சம் பேருக்கு தலா 5000 ரூபாய் நிதி உதவியை வழங்குவதாக எடியூரப்பா  அறிவித்தார்.

அதே போன்று சுமார் 40 ஆயிரம் ஆஷா பணியாளர்களுக்கு தலா 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடக அரசு முதற்கட்டமாக 1610 கோடி ரூபாயும், நேற்று 162 கோடியும் கொரோனா நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments