ஒரே மாதத்தில் நான்கு முறை நிலநடுக்கம்... டெல்லியில் மக்கள் பீதி

0 1128
டெல்லியின் பிதம்புரா பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில்  சுமார் ஒரு மாதத்தில் இன்று 4ஆவது முறையாக நேரிட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஏப்ரல் 12ம் தேதி டெல்லியில் 3 புள்ளி 5 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கம் நேரிட்டது. இதையடுத்து வந்த நாள்களில் மேலும் 2 முறை லேசான நிலநடுக்கங்கள் நேரிட்டன.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் குறைவாகவே பதிவானதால் சேதம் எதுவும் நேரிடவில்லை. இந்நிலையில் டெல்லியின் பிதம்புரா பகுதியை மையமாகக் கொண்டு இன்று 4ஆவது முறையாக  மீண்டும் லேசான நிலநடுக்கம் நேரிட்டது.

ரிக்டர் அளவுகோலில் 2 புள்ளி 2ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்நிலநடுக்கத்தில் சேதம்   ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments