உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 12 வது இடம்

0 2081

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடாவை முந்தி இந்தியா 12ம் இடத்துக்கு வந்துள்ளது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை முதல் 3 இடங்களை வகிக்கின்றன. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா 12ம் இடத்தில் இருந்தது.

அந்த நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 156ஆக இருந்தது. இந்நிலையில் கனடாவை விட குறைவாக எண்ணிக்கை கொண்டிருந்த இந்தியா, அந்த எண்ணிக்கையை நேற்று தாண்டியது. அதாவது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 70 ஆயிரத்தை கடந்தது.

இதனால் கனடாவை முந்தி 12ஆவது இடத்திற்கு இந்தியா சென்றது. 11ஆவது இடத்தில் இந்தியாவின் அண்டை நாடான சீனா உள்ளது. அந்நாட்டில் 84 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments