உரிமைக்குரல் எழுப்பிய தமிழகம் : உரிய நிதி ஒதுக்க கோரிக்கை

0 3395
டெல்லியில் இருந்து சென்னைக்கு, தற்போதைய சூழலில் ரயில் விட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு, தற்போதைய சூழலில் ரயில் விட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

ஊரடங்கு முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ள சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர்
நரேந்திரமோடி, பிற்பகலில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மருத்துவ உபகரணங்கள் வாங்க சிறப்பு நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,தமிழகத்திற்கான ஜி.எஸ்டி நிலுவை தொகையை உடனே விடு விக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதலான உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் விட வேண்டாம் என வலியுறுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே 31ம் தேதி வரை, ரயில் - விமான சேவைகளை நிறுத்தி வைக்குமாறு யோசனை தெரிவித்தார்.

விவசாயிகளின் போக்குவரத்து செலவுகளுக்கு மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments