இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் உயிரிழப்பு

0 1867
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 2 ஆயிரத்து 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் இதுவரை 67 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரத்து 916 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 206 பேர் உயிரிழந்துள்ளனர். 44ஆயிரத்து 209 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக, புதிதாக 4 ஆயிரத்து 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம், 31.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. 22 ஆயிரத்தை கடந்து பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 8 ஆயிரத்தை கடந்து குஜராத் 2ஆம் இடத்திலும், 7 ஆயிரத்தை கடந்து தமிழகம் மூன்றாம் இடத்திலும், 7 ஆயிரத்தை நெருங்கி டெலலி 4ஆம் இடத்திலும் உள்ளன.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மேற்குங்கம், பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தெலுங்கானாவில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், கர்நாடகாவில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பாதித்த கேரளாவில், 512 பேர் பாதிக்கப்பட்டு, 489 பேர் குணமடைந்துள்ளனர், அங்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments