மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

0 2615

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர, வழிவகை செய்யும் புதிய மின்சார திருத்தச் சட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும் ஏழை நடுத்த மக்களுக்கு 100 யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கும் புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மின்கொள்முதல், மின்விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, மத்திய அரசின் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்றே தீர்வு காணும் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய சட்டத்திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments