ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது: உலக சுகாதார அமைப்பு

0 1877

ஊரடங்கை உலக நாடுகள் அவசர கதியில் விலக்கிக் கொள்ள கூடாதென்றும், அப்படி விலக்கினால் கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரித்து விடும் என்றும்  உலக சுகாதார அமைப்பு (W.H.O.)எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கை இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் தளர்த்தியுள்ளன.

இந்நிலையில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், மிகவும் கவனமுடன் ஊரடங்கு விவகாரத்தில் உலக நாடுகளின் அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments