ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பி இருப்பதாக ரயில்வே அறிவிப்பு

0 1994
ரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பினர்

சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களில் சிக்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கால் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதனால் தங்களது சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச் செல்ல விரும்பியும், அரசின் கட்டுப்பாடுகளால் செல்ல முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து அவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மே 1 ஆம் தேதி முதல் 115 சிறப்பு ரயில்கள் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி இருப்பதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments