பாக். ஆதரவு தீவிரவாதிகளின் வலிமையை ஒடுக்கிய இந்திய ராணுவத்தினர்

0 949

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷே முகமது ஆகிய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் கிட்டதட்ட அழிவின் விளிம்பில் உள்ளதால் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெறும் 400 தீவிரவாதிகளை காஷ்மீர் பக்கம் திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது.

தாலிபனுடன் இணைந்து ஆப்கான் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்த தீவிரவாதிகளை இந்தியா பக்கம் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறையினரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சில தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையை ஊடுருவிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களின் வலிமை குறைந்துள்ளது. இதனால் இப்போது ஆப்கானில் சண்டையிடும் தீவிரவாதிகளை காஷ்மீர் பக்கம் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments