ஊரடங்கு நீட்டிப்பா..? மத்திய அரசு யோசனை எனத் தகவல்

0 9310

நாடு தழுவிய ஊரடங்கை, மேலும் நீட்டிக்க மத்திய அரசு யோசனை செய்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு சிந்திப்பதாக, சொல்லப்படுகிறது. 

உலகை உலுக்கும் கொரோனாவின் தாக்கம், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக, மார்ச் 21ஆம் தேதி மக்கள் ஊடரங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்க, வெளியில் நடமாடாது வீடுகளில் தனித்திருத்தல் அவசியம் என்ற நோக்கத்தின் அடிப்படையில், நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு, வருகிற 14ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்த சூழலில், கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதால், ஊரடங்கை, மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பாடுபடும் சமயத்தில், ஊரடங்கு முடிந்து, மக்கள் வெள்ளமென திரண்டால், தொற்றுநோய் பரவலை தடுப்பது இயலாத காரியமாகிவிடும் என பல்வேறு மாநிலங்களும், மருத்துவ உலகமும், மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பல முனைகளிலும் கோரிக்கைகள் தொடர்வதால், நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு யோசனை செய்து வருவதாக, ஏ.என்.ஏ செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments