இந்தியாவில் 4ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு...

0 5330

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 109 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கடுத்தபடியாக, தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில், 503 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, 18 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பட்டியலில் தெலுங்கானா 4ஆவது இடத்தில் உள்ளது. அங்கு, 321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 34 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதன் முதலில் கொரோனா தொற்றுக்கு ஆளான கேரளத்தில் 314 பேர் பாதிக்கப்பட்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக 55 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

6ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தானில், 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 21 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு இதுவரை யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை.

227 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உத்தரப்பிரதேசம் 7ஆவது இடத்திலும், 226 பேருக்கு உறுதி செய்யப்பட்டு ஆந்திரா 8ஆவது இடத்திலும் உள்ளன. 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மத்தியப் பிரதேசம் 9ஆவது இடத்திலும், 151 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கர்நாடகம் 10ஆவது இடத்திலும் உள்ளன. குஜராத்தில் 122 பேருக்கும், ஜம்மு-காஷ்மீரில் 106 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது. மிகக்குறைந்த அளவாக மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் மொத்தத்தில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 67 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 291 ஆகவும், பலியோனார் எண்ணிக்கை 109 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது, நாட்கணக்கில் பார்க்கும்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 693.

இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர், அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, சுமார் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா - இந்தியா நிலவரம்

1 மகாராஷ்டிரா 690
2 தமிழகம்  571 
3 டெல்லி  503 
4 தெலுங்கானா  321
5 கேரளா 314
6 ராஜஸ்தான்  253
7 உத்தரப்பிரதேசம்  226
8 ஆந்திரா  226
9 மத்தியப் பிரதேசம்  165
10 கர்நாடகம் 151
11 குஜராத் 122
12 ஜம்மு காஷ்மீரில் 106SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments