ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

0 1672

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பத்போராவில் நேற்று நடைபெற்ற சண்டையில் 4 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கேரன் செக்டார் (Keran sector ) பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்த நிலையில், 4 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments