இங்கிலாந்தில் 4 ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 9 நாட்களில் கட்டத் திட்டம்..!

இங்கிலாந்தில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை 9 நாட்களில் கட்டி முடிக்கும் பணிகள் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா காரணமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் லண்டனில் 100 ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரம் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை கட்டுவதற்கு லண்டன் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் அதிவிரைவாக நடந்துவருகின்றன. டைம் லாப்ஸ் முறையில் இதற்கான வீடியோ வெளியாகி உள்ளது.
Comments