ஆயிரம் பேர் பலி... இடிந்து போன இத்தாலி

0 25774

உலகிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரசின் தொற்றுக்கு இத்தாலியில் ஒரே நாளில் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பது அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 6 ஆயிரம் பேர் தொற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 9 ஆயிரத்து 134 பேர் மரணித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கொரோனாவின் பூர்வீகமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த 45 மருத்துவர்களும் அங்கு உயிரிழந்துள்ளனர். ஜெனோவா நகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, சான் மார்டினோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.

ஸ்பெயினில் 8 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் அங்கு 773 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு ஏற்கனவே 33 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால், பெரும் பாதிப்பை சந்தித்த சீனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களோ, மரணித்தவர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments