19 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி..!

0 4534

உலகில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் உயிரிழப்பு பெருமளவு சரிந்துள்ளது. இன்று அந்த நாட்டில் மேலும் 4 பேர் மட்டும் பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்தால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் அமெரிக்காவில் 4 பேரும், சுவிட்சர்லாந்தில் 11 பேரும், தென்கொரியாவில் 6 பேரும், போலந்து, இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரியாவில் தலா 2 பேரும், மெக்சிகோ, பராகுவே, செர்பியா, ஹங்கேரி, நார்வே, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையும் சேர்த்தால், உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

இதேபோல் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு புதிதாக சுமார் ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மலேசியாவில் 172 பேரும், தென்கொரியாவில் 155 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இவர்களையும் சேர்த்து, இதுவரை உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதை தவிர்த்து சிகிச்சைக்கு பின்சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களில் சுமார் 13 ஆயிரத்து 100 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இத்தாலியில்  நேற்று ஒரே நாளில் மட்டும் 743 பேர் கொரோனா தொற்று நோய்க்கு பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 820ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசின் பூர்வீகமாக கருதப்படும் சீனாவில்  சுமார் 3 ஆயிரத்து 280 பேர் மட்டுமே பலியாகியுள்ள நிலையில், அதைவிட 2 மடங்கு அதிகம் பேர் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இத்தாலியில் 69 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments