கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 - முதலமைச்சர்

0 27841

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரைவிலையின்றி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டார். 3,280 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அனைத்துகுடும்பஅட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்டநாளிலும், நேரத்திலும் விநியோகிக்கப்படும். இந்த 1,000 ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களைபெறவிருப்பம் இல்லாதவர்கள், அதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவுசெய்து கொள்ளலாம்.

குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல்எண்ணெயும் வழங்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிறமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000/- ரூபாயுடன் கூடுதலாக 1,000/- ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்

மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments