உள்நாட்டு விமான சேவை ரத்து..!

0 2627

கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியாக உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.செவ்வாய் நள்ளிரவு முதல் எந்த உள்நாட்டு விமானமும் இயக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்க உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் உள்நாட்டு சரக்கு விமானப் போக்குவரத்து எந்த தடையும் இன்றி நடக்கும். ஏற்கனவே மார்ச் 22 முதல் மாத இறுதி வரை சர்வதேச விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானங்களும் முடக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments