கட்டுப்பாட்டை மீறி பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தெலங்கானா எம்.எல்.ஏ

0 928

தெலங்கானாவில் வீட்டுக் கண்காணிப்பில் இருந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ, கட்டுப்பாட்டை மீறி பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக வெளிநாடு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்களுக்கு அரசு கட்டாய கண்காணிப்பில் வைத்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய கோனேரு கோனப்பா, வீட்டு கண்காணிப்பில் இருக்க வலியுறுத்தப்பட்டார்.

ஆனால், அவர் விதிமுறைகளை பின்பற்றாமல் ரயிலில் பயணம் மேற்கொண்டு, பொது நிகழ்ச்சிகளிலும், கட்சி கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

மக்கள் பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பொறுப்பற்று செயல்படுவது மிகவும் தவறு என, கோனப்பாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments