10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்த சைக்கோ

0 1874

சென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்றதாக கொடூரன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியைச்சேர்ந்த 10 வயது சிறுமி  நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியபின்பு, போலீசார் வந்து தேடியபோது வீட்டின் பின்புறம் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில் நள்ளிரவில் கழிப்பறை சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாக 3 வது மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றதாகவும், சிறுமி அலறியதால் தாக்கி 3 ஆவது மாடியிலிருந்து வீசியதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments