கொரோனா பீதியால் களைக்கட்டும் கோமிய வியாபாரம்..! ஒரு லிட்டர் ரூ.500

0 3854

கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து சிலர் வாங்கிச் செல்கின்றனர்.

மாட்டுச் சாணம் மற்றும் மாட்டு கோமியம் கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தி பரவிவருகிறது. இந்நிலையில் 2 மாடுகள் வைத்து வளர்த்துவரும் கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி என்பவரிடம், ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய்க்கும் ஒரு கிலோ மாட்டு சாணத்தை 500 ரூபாய்க்கும் சிலர் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தைவிட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் கொரோனாவை குணமாக்கும் என எந்த மருத்துவ ஆய்வறிக்கையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments