ஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வரவேண்டாம்-வாடிகன் நிர்வாகம்

0 907

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக யாரும் வரவேண்டாம் என வாடிகன் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போப் நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரசால், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால், ஈஸ்டர் புனித வாரத்தின் அனைத்து வழிபாட்டு கொண்டாட்டங்களும், பிரார்த்தனைகளும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஏப்ரல் 12ம் தேதி வரையிலான பிரார்த்தனைகள், வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments