காஷ்மீர் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் -அமித் ஷா

0 770

காஷ்மீர் மக்கள் தொகை கணக்கில் மாற்றம் இருக்காது என்று தம்மை சந்தித்த காஷ்மீர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

காஷ்மீரின் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் விலகி வந்து புதிதாக அப்னி பார்ட்டி என்ற கட்சியை மத்திய அரசின் துணையுடன் அமைத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் 24 பிரதிநிதிகள் அடங்கிய அப்னி பார்ட்டி கட்சியின் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அவர்களிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இரண்டவது நாளாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இக்குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 40 பிரச்சினைகள் எழுப்பப்பட்டு அவை குறித்த அரசின் பதிலை அக்குழுவினர் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமித் ஷா காஷ்மீரின் வளர்ச்சிக்கு அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments