சரிந்தது சிக்கன் விலை... எகிறியது மீன் விற்பனை..!

0 7017

கொரானா மற்றும் பறவைக்காய்ச்சல் அச்சுறுதல் காரணமாக சென்னையில் சிக்கன் விற்பனை வீழ்ச்சி அடைந்த நிலையில் மீன்கள் விற்பனை சூடுபிடித்து பல இடங்களில் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

கொரானா மற்றும் பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழிக்கறி விலை சரிந்துள்ளது. சென்னை புதுப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூபாய் 220 க்கு விற்கப்பட்ட கோழிக்கறி இன்று 100 ரூபாயாக சரிந்தது. ஆனால் நாட்டு கோழி கிலோ ரூபாய் 280 க்கு விற்பனை ஆனாலும் மக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்வதாக வியாபரிகள் தெரிவித்தனர்

இந்நிலையில் ஆட்டுக்கறி கிலோ ரூபாய் 740 வரை விற்கப்பட்டதால், மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விடுமுறை தினமான இன்று சென்னை நகரின் பல இடங்களில் சிக்கன் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரிய மீன் சந்தைகளில் ஒன்றான சிந்தாதிரிப்பேட்டையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூபாய் 600 லிருந்து 700 க்கும், சங்கரா மீன் ரூபாய் 200 முதல் 250க்கும், வவ்வால் மீன் ரூபாய் 400 ல் இருந்து 450க்கும், அயிலை மீன் ரூபாய் 100 முதல் 150க்கும் விற்பனையானது. கொரானா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கிச்செல்வதாகவும், மீன் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாகவும் மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாகையில் மீன் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியதால் விலை அதிகரித்துள்ளது. 600 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் 750 முதல் 900 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான வாவல் 450 க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையான சுறா 400 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான கடல் விரால் 650 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளநிலையில் பவானிசாகர் மீன் வளர்ச்சிக் கழக விற்பனை நிலையத்தில் மீன் விற்பனை அதிகரித்துள்ளது. ஜிலேபி மீன் கிலோ 100 ரூபாய்க்கும், கட்லா, ரோகு, மிருகால் மீன்கள் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் பிராய்லர் கோழி விற்பனை கடுமையாக சரிந்து, முழுக்கோழி 50 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், குறைவான மக்களே வாங்கிசென்றனர். மேலும் ஆட்டிறைச்சி கிலோ ரூபாய் 650 க்கு விற்பனையாவதால்,  மீன் விற்பனை அதிகரித்து அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments