இலக்கியாவுக்காக சில்லறையை இழந்த இலவுகாத்த கிளிகள்.!

0 7341

ஒரு நாள் இரவு முழுவதும் அரைகுறை ஆடையில் டிக்டாக் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இலக்கியா என்பவரின் பெயரில் பணம் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழிப்பறி செயலியில் பணத்தை இழந்த இலவுகாத்த கிளிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

பக்தி பழமாக... பட்டையும் பொட்டுமாக... கஞ்சத்தனமான ஆடையுடன் காட்சி தரும் இவர்தான் டிக்டாக் இளவரசி...இல்ல இல்ல டிக்டாக் இலவச அரிசி இலக்கியா.

நடிகைகளே கொடுத்த காசுக்கு மேல திறமையை காட்ட மறுக்கும் நிலையில், இலவச ஆட்டம் போடும் டிக்டாக் சிலுக்கு இலக்கியாவின் திறமையை காண டிக்டாக்கில் ஒரு வவ்வால் கூட்டமே தவம் கிடக்கிறது.

ஒழுக்கமாக சேலையுடன் திறமையை காட்டிய இலக்கியா, லைக்கிற்கு கூட லாயக்கி இல்லை என்று ஒதுக்கப்பட்டவர்

லைக்கிற்காக மாடர்ன் டிரெஸ் மந்தாகினியாக மாறிய இலக்கியாவை , திருமண வீட்டு பேனரில் வைத்து நேசிக்க தொடங்கி விட்டனர் இலக்கியா பக்தர்கள்.

இப்போது ஊருக்கு இளைத்தவன் 90ஸ் கிட்ஸ்..! என்பது போல இலக்கியாவும் திருமணத்திற்கு ஏங்கும் 90ஸ் கிட்ஸ்சை வம்புக்கு இழுத்து ஒரே நாளில் டிக்டாக்கில் பிரபலமானார்.

காமெடி வீடியோவில் கூட அம்மணி கவர்ச்சியோடத்தான் அக்ட் கொடுப்பார்ங்கற அளவுக்கு, இலக்கியாவின் டிக்டாக் வீடியோக்கள் அனைத்தும் அடல்ட்ஸ் ஒன்லியாக மாறியதால், அவருக்கு லைக்குகளும் கொட்ட தொடங்கியது.

இந்த நிலையில் தான் இலக்கியாவின் பெயரில் உருவான ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் அரையும் குறையுமாக... திறமை காட்டிய அவரது வீடியோக்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் இலக்கியாவிடம் கமெண்டில் பல் இழித்த ஜொள்ளர்களிடம், ஒரு நாள் இரவு முழுவதும் பெர்சனல் சாட்டில் விருப்பம் போல டிக்டாக் வீடியோ பதிவிடுவதாக ஆசைகாட்டி, தலைக்கு 5 ஆயிரம் ரூபாய் என வங்கி கணக்கு மூலம் வசூலித்துள்ளனர்.

எப்படியும் பெர்சனல் சாட்டில் இலக்கியா வருவாள் என்று இரவு முழுவதும் டிக்டாக்கில், திக் திக் என்று விழித்திருந்த இலவுகாத்த கிளிகளின் கனவு பாழாய் போனது தான் மிச்சம்...!

டிக்டாக் ஜொள்ளர்கள் பணம் செலுத்தியதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்றும், அது போலி கணக்கு என்றும் கூறி சிரித்தபடியே வேப்பில்லை அடித்துள்ளார் இலக்கியா

கையில் பாட்டிலுடன் குடியை கெடுக்க வழிகாட்டும் இந்த டிக்டாக் மாதுவின் சூது காரணமா ? அல்லது போலி கணக்குகள் தொடங்கி உள்ள பேப்பெர் ஐடிகள் கைவரிசையா ? என்பது தெரியாமல் சில டிக்டாக் அடிமைகள் கமெண்டில் கதறி தவிக்க, இந்த டிக்டாக் சிலுக்கு தன் காலில் இல்ல சுளுக்கு என்று விளக்கம் அளித்துள்ளார்

அதே நேரத்தில் பணத்தை பறிகொடுத்து விட்டு போலீசில் புகார் கொடுக்க சென்றால், மானத்தையும் சேர்த்து பறிகொடுக்க வேண்டி வருமே என்று வெட்கப்பட்டு டிக்டாக் மானஸ்தர்கள் பலர் மவுனம் காப்பதாக கூறப்படுகின்றது.

குடும்பத்தையும், சமூகத்தையும் கெடுக்கும் கொடிய செயலி டிக்டாக் தற்போது வீட்டில் இருந்தே பணம் பறிப்பதற்கும் புது ரூட்டு போட்டு கொடுத்துள்ளதால் கொள்ளைக்கார செயலியாக உருமாறி உள்ளது..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments