சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தால் சைபர் சட்டத்தில் நடவடிக்கை

0 609

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்தால் குண்டர்  சட்டத்திற்கு ஈடான சைபர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில் கடலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற பொறியியல் பட்டதாரி மீது குண்டர் சட்டத்தில் ஈடான, முதன் முறையாக இந்த கடுமையான சைபர் சட்டம் பாய்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

விக்னேஷ் மீது சென்னையைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட பெண்கள் மத்திய குற்றப்பிரிவில் தொடர் புகார்கள் அளித்து இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் சைபர் குண்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று கூறிய போலீசார் அவர்கள் குண்டர் சட்டத்தைப் போன்று ஒரு வருடம் ஜாமீன் பெற முடியாது என தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments