உலகின் மிகப்பெரிய மாஸ்க் தயாரிப்பு நிறுவனமாக மாறிய எலக்ட்ரிக் கார் நிறுவனம்

0 26259

சீனாவை உலுக்கி எடுத்த கொரோனா அந்நாட்டின் பல முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தை அடியோடு மாற்றி உள்ளது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் பிரபலமாக விளங்கிய BYD Co., என்ற ஆட்டோ மொபைல் நிறுவனம், தற்போது உலகின் மிகப்பெரிய முகக்கவச தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபேஸ் மாஸ்க்குகளை தயாரிக்க துவங்கியது BYD Co நிறுவனம். தற்போது நாளொன்றுக்கு 5 மில்லியன் மாஸ்க்குகளை தயாரித்து வருவதாகவும், இந்த உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவிர வைரஸ் பரவல் காரணமாக மாஸ்க்குகள் மற்றும் சானிட்டைசர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது. இவற்றுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை சீன தொழில்துறை நிறுவனங்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.1995 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு மொபைல் போன் பேட்டரி தயாரிப்பில் ஈடுபட BYD Co நிறுவனம் மின்சார வாகனங்கள், ஈ.வி பேட்டரிகள், மோனோரெயில் மேம்பாடு மற்றும் semiconductors உள்ளிட்டவற்றை தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல குவாங்சோ ஆட்டோமொபைல் குரூப் கோ., பெட்ரோலிய நிறுவனமான சினோபெக் மற்றும் ஐபோன் அசெம்பிளர் ஃபாக்ஸ்கான் ஆகியவையம் கூட இப்போது ஃபேஸ் மாஸ்க்குகளை உற்பத்தி செய்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments