தாயார் கடத்தப்பட்டதாக வழக்கு தொடர்ந்த மகனுக்கு ரூ.50000 அபராதம்

தாயார் கடத்தப்பட்டதாக வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி வெம்பக்கோட்டையை சேர்ந்த விமல் ஈஸ்வரன் என்பவர் தமது தாயார் சாந்தி சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருப்பதாகவும், ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் பங்கேற்காமல் இருப்பதற்காக அவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும் வரை, சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாந்தி நேரில் ஆஜராகி தாம் குரங்கணியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து விமல் ஈஸ்வரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் செயல்பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Comments