இந்தியாவில் அறிமுகமான Redmi Note 9 series ஸ்மார்ட் போன்களின் விலை, சிறப்பம்சங்கள்..

0 8948

மொபைல் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Redmi Note 9 series போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். Redmi Note 9 series-ல் Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட புதிய மொபைல் போன்கள் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக மைதானம் ஒன்றில் 2,000 பேர்களுக்கு மத்தியில் இந்த அறிமுக நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது சியோமி. ஆனால் கொரோனா பீதி காரணமாக முடிவை மாற்றி கொண்டு, ஆன்லைனில் அறிமுக நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டது சியோமி.

image

Redmi Note 9 series-ல் மூன்று ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக பரவி வந்த நிலையில், Note 9 series-ன் கீழ் இரு ஸ்மார்ட் போன்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய Redmi Note 9 series ஸ்மார்ட் போன்களுமே குவாட் பின்புற கேமராக்கள் மற்றும் hole-punch டிஸ்பிளேவுடன் வருகின்றன.

இரு மாடல்களுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5-ஐ பெற்றுள்ளது மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி இணைப்புடன் வருகின்றன. Android 10-ல் இயங்குதளத்தை கொண்டுள்ளன. side-mounted fingerprint sensor-ஐ கொண்டுள்ளன.

டிஸ்பிளே:

Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max மொபைல்கள் 6.67-இன்ச் Full HD+ (2400x1080) display-வை கொண்டுள்ளன. இரண்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி மூலம் இயக்கப்படும் 8nm chipset உடன் வெளிவருக்கின்றன.

image

ரேம்:

RAM-ஐ பொருத்தவரை Redmi Note 9 Pro 4 GB மற்றும் 6 GB வேரியண்ட்களிலும், Redmi Note 9 Pro Max 6 GB மற்றும் 8 GB ரேம் வேரியண்ட்களிலும் வெளிவருகிறது.

ஸ்டோரேஜ்:

Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max மொபைல்கள் 64 GB மற்றும் 128 GB Storage Capacity வேரியண்ட்களை கொண்டுள்ளன.

பின்பக்க கேமரா:

Redmi Note 9 Pro மொபைலானது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் wide-angle கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் depth சென்சாரை கொண்டுள்ளது. சிறந்த வீ டியோக்களை எடுக்க Video pro mode அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. Redmi Note 9 Pro Max பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் wide-angle கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் depth சென்சார், மூல புகைப்படம் எடுத்தல் ஆதரவு, சார்பு வண்ணம் மூல புகைப்படக்காரர்களுக்கு.

image

செல்ஃபீ கேமரா:

RedmI Note 9 Pro மொபைலில் 16-megapixel முன்பக்க கேமராவும், Redmi Note 9 Pro Max மொபைலில் 32-megapixel முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேட்டரி:

Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max இரண்டிலுமே 5020 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் RedmI Note 9 Pro 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனும், Redmi Note 9 Pro Max 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனும் வருகிறது.

image

விலை விவரங்கள்:

Redmi Note 9 Pro மொபைலின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Note 9 Pro Max மொபைலின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ 16,999, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.18,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன் விற்பனை வரும் மார்ச் 17-ம் தேதியும், Redmi Note 9 Pro Max மொபைல் விற்பனை மார்ச் 25-ம் தேதியும் தொடங்கும் என அறிவித்துள்ளது சியோமி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments