கொரானா எதிரொலி: செல்பி எடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

0 449

இலங்கை சுற்றுப்பயணத்தின்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுக்கவும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு இங்கிலாந்து அணி வந்துள்ளது. இந்நிலையில் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (JOE ROOT) கொரானா பரவாமல் தடுக்கும் வகையில் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது கை குலுக்குதல், செல்பி எடுத்தல், ஆட்டோகிராப் கையெழுத்திடுதலுக்கும், தேவையில்லாத சந்திப்புகளை தவிர்க்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments