தமிழ்நாட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் - தமிழக அரசு

0 3977

தமிழகத்தில் வணிக நிறுவன பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டவிதிகள் பின்பற்றப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக 1948 தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும் 1959 உணவு நிறுவனங்கள் விதிகளிலும் முறையே 1983 மற்றும் 1984-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாகவும், ஆங்கிலம் 2-வது இடத்திலும், மற்ற மொழிகள் 3-வது இடத்திலும் இருக்கவேண்டும் என்றும், இந்த சட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments