Yes Bank-ஐ நிர்வகிக்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் - RBI தகவல்

0 1204

யெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கியை நிர்வகிக்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாராக்கடன் மற்றும் நிதிமோசடி பிரச்னைகளில் சிக்கிய எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் தான் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யெஸ் வங்கியின் அனைத்து செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி கையிலெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எஸ் வங்கி தொடர்பாக வரைவுக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, எஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு வருடத்திற்கு தற்போதுள்ள ஊதியத்துடன் பணியில் தொடர்வார்கள்

புனரமைக்கப்பட்ட வங்கிக்கான அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 5 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்ற ரிசர்வ் வங்கி திட்டம்

மேலும் பங்குகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்பட்டு 24 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் 48 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றப்படும்

வங்கியை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படும்

வங்கியில் இரண்டு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் இருக்க வேண்டும்

எஸ் வங்கிக்கு கூடுதல் இயக்குநர்களை ரிசர்வ் வங்கி நியமிக்கலாம்

ரிசர்வ் வங்கியின் தற்போதைய கொள்கைகளுக்கு ஏற்ப, தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய அலுவலகங்கள் மற்றும் கிளைகளைத் திறக்கலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments