உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டரில் விபத்து

உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூடப்பட்டது. உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக ரோலர் கோஸ்டர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 205 அடி உயரத்திலிருந்து இறங்கும் வண்ணம் செய்யப்பட்டுள்ளது.
சிடார் பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோலர் கோஸ்டரின் இரண்டு கார்கள் திடீரென பின்னோக்கி சென்று ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் யாருக்கும் காயமில்லை என்ற போதும் பராமரிப்பு காரணம் என்று கூறி அந்த ரோலர் கோஸ்டர் திடீரென மூடப்பட்டது.
Comments