ஆந்திர கிராமம் ஒன்றில் முதல் முறையாக தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி

0 488

ஆந்திர மாநிலத்தில் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் முதல் முறையாக தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

கர்னூல் மாவட்டத்திலுள்ள ஹோசூர் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை . இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் தலித் மக்கள் மனு அளித்தனர்.

காவல்துறையினர் கிராம பெரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், முதன்முறையாக ஹோசூர் கிராமத்திலுள்ள கோவிலுக்குள் சென்று வழிபட தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments