உலகில் செல்வாக்குமிக்க பெண்மணிகள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு 34ஆவது இடம்

0 449

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் செல்வாக்குமிக்க பெண்மணிகள் பட்டியலில் (Forbes most-powerful women list) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34ஆவது இடத்தில் உள்ளார்.

அரசியல், வர்த்தகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு பெற்று திகழும் பெண்மணிகள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான பட்டியலில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 9ஆவது ஆண்டாக முதலிடத்தை வகிக்கிறார். கடந்த ஆண்டில் 22ஆவது இடத்திலிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லார்கட் தற்போது 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் 40ஆவது இடத்திலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா 42ஆவது இடத்திலும், சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பர்க் 100ஆவது இடத்திலும் உள்ளனர்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments