புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு

0 524

புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்று பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் ஆதரவை பெறும் நோக்கில், அங்குள்ள சுவாமி நாராயண் கோயிலுக்கு போரீஸ் ஜான்சனும், அவரது மனைவி கேரி சைமன்ட்சும் சென்றனர்.

அப்போது அவர், புதிய இந்தியாவை மோடி கட்டமைத்து வருவது தமக்கு தெரியும் என்றும், இதை பிரிட்டனில் ஆட்சியிலிருக்கும் தமது அரசு முழுமையாக ஆதரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டனில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி  இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பதாகவும், ஆனால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு இடமில்லை என ஜான்சன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments