ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவக்கம் -டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

0 518

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்கியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல் ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதற்கான டிக்கெட் விற்பனை துவங்கிய நிலையில், ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். குறைந்தபட்சமாக 1,200 முதல் அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை டிகெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments